பயம் என்பது என்ன ? ஏன் ? நல்லதா? வெல்ல வழி




 பயம் என்பது என்ன?

பயம் ஏன் உருவாகிறது?

 பய உணர்வு நல்லதா?

பயத்தை வெல்லவழி என்ன?           

             

            

        

            

                

                      

#பதில்:(சற்று நீண்டது...)

பயம் என்பதற்கு பல்வேறு வரையறைகள் இருக்கிறது.


பயம் என்பது நடக்காத ஒன்றை நடந்துவிடும் என்று பெரும்பாலும் மனம் செய்யும் ஒரு கற்பனை என்று கூறலாம்.


எல்லாவித பயத்திற்கும் காரணம் உடலின் மேல் உள்ள அதீத பற்று என்று கூறலாம்.


பயம் என்பது நம்மை நல்ல முறையில் நடத்துவதற்கு உதவக்கூடிய அற்புதமான சாதனம் என்றும் கூறலாம்.


பயம் என்பது நமக்கு முன்னெச்சரிக்கை உணர்வைத் தந்து வரப்போகும் தீமையிலிருந்து நம்மை தடுத்துக்கொள்ள உதவக்கூடிய இறைவனால் அளிக்கப்பட்ட வரம் எனவும் கூறலாம்.


ஆக, பயமே இல்லாதவன் மனிதன் அல்ல. பய உணர்வு என்பது கெட்டதற்கு அல்ல.


ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று பொதுமைப்படுத்தப்பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது. மொத்தத்தில், பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீதக் கற்பனையால் விளைவது. ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே பயம் என்பது, எப்போதும் தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு மட்டுமே.


பலர் பயம் என்பதை ஒரு மனநோய் கணக்காக நினைப்பார்கள், இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சாதாரண பிரச்னைதான்.... என்பதை உணர வேண்டும் என மனோதத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.


பயம் என்ற உணர்வு, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான்  நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கிறது. தொடர்ந்து வாழவைக்கிறது. எனவே, பயம் மிகவும் அவசியமானது. 


அதீத பயமும், ஃபோபியாக்களும் தான் பிரச்னையே!

இவற்றை முழுமையாக உணர்ந்தால் நிச்சயம் இந்த பயமும் சாதாரணமானதுதான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.


#பயஉணர்வைத்தீர்க்கஎன்ன_வழி?


முதலில் பய உணர்வு வரக்கூடாது என நினைக்கக் கூடாது.


அடுத்து, இந்த பய உணர்வு நம்முடைய நன்மைக்காக வந்துள்ளது. 

இந்த பய உணர்வின் தன்மையை உணர்ந்து, நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையை எவ்வாறு எல்லாம் சமாளித்து, அறிவை ஆயுதமாக்கி தீர்க்க முடியும் என யோசிப்பதே சிறந்த வழி.


பயம் இல்லாமல் தைரியமாக செயல்படுவது என்பது, பய உணர்வை சரியாக புரிந்து கொண்டோம் என அர்த்தம்.


ஒரே ஒரு உதாரணம் போதும்,


அடர்ந்த இருட்டில் சென்றால் பயம் என வைத்துக்கொள்வோம்.


இந்த பயம் வர பல காரணம் இருக்கிறது,

பள்ளம் இருக்கும், மேடு இருக்கும், கல் தடுக்கி கீழே விழலாம். நாம் எதிர்பாராத ஒன்று நம்மை தாக்கக்கூடும். (பாம்பு, பூச்சி இனங்கள்...)


இதனைத் தடுக்க ஒரே வழி, வெளிச்சம் கொண்டு அவ்வழியைக் கடப்பதுதான். அப்படியும் பயம் என்றால் துணைக்கு ஒருவரை அழைத்து கொண்டு செல்வதுதான்.


இது எல்லோரும் அறிந்த எளிய உதாரணம்.


இவ்வாறு செய்வதால் பய உணர்வை நீக்கிவிடலாம்.


பய உணர்வு வந்ததால்தான் இந்தத் துணைக் கருவிகளை நாம் தேடுகிறோம். இல்லை என்றால் ஆபத்தில் மாட்டிக் கொள்வோம்.


நம்மால் நேரடியாக, எதிர்கொள்ளக்கூடிய பயத்தை அறிவு கொண்டு மேற்கண்டவாறு நீக்கிக் கொள்ளலாம்.


ஆனால் முற்றிலும் எதிர்பாராத விதத்தில், மறைமுகமாக வரக்கூடிய ஆபத்தை நீக்கிக்கொள்ள என்ன செய்வது? அதற்கான பயம் தொடர்ந்து கொண்டுள்ளதே, இதற்கு என்ன வழி?


இதற்கும் வழிகள் இருப்பதாக பெரியோர்கள் கூறுகிறார்கள்.


அது, 

தியானமே சிறந்த வழி.

சரணாகதியே சிறந்த வழி.

பரம்பொருளை நினைப்பதே சிறந்த வழி.

இயற்கையின் இயல்பை உணர்வதே சிறந்த வழி.

பிரபஞ்ச_பேராற்றலை உணர்ந்து செயல்படுவதே சிறந்த வழி.

.....

ஆக, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, இதுதான்.


மனதில் இயல்பாக வரும் பய உணர்வு நம் நன்மைக்கே.


பய உணர்வு முன்னெச்சரிக்கைக்கே.


இயன்றவரை அறிவு கொண்டு செயல் செய்ய வேண்டும். மற்றவற்றை, பரம்பொருளிடம் விட்டு சரணாகதி அடைய வேண்டும் இதுவே மன அமைதிக்கு வழி.


எளியவழியான சரணாகதியை சொல்கிறது

Comments