திருச்சேறை ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’


கடன் சுமை நீக்கும் திருச்சேறை ‘ரிண  விமோசன லிங்ககேஸ்வரர்’  அபிஷேக வீடியோ!  திங்கட்கிழமை தோறும் திருச்சேறை சிவபெருமான் வழிபாடு வீடியோ ! இன்று 31/8/2020 திங்கட்கிழமை  பதிவு செய்துள்ளோம் மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர். கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள் வழிபடுங்கள்  எல்லோரும் இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றோம் .  திருக்கோவில் கும்பகோணத்தில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள் வழிபடுங்கள் கோயில் பக்தர்களுக்கு அனுமதிக்கு திறந்தபோது  ஒரு  திங்கள் அன்று வழிபடுங்கள் . இப்போது அர்ச்சனை 11 வாரம் பணம் 225/- 11 வது வார அபிஷேகம் பணம் நிர்வாக அலுவலர் பெயருக்கு உங்கள் பெயர் நக்ஷத்திரம் எழுதி டிராப்ட் எடுத்து அனுப்பி வழிபாடு  தொடங்குங்கள்  .விவரங்கள் போனில் கேட்டுக்கொண்டு DD எடுங்கள்

முயற்சித்து 11 திங்கள் வழிபடுங்கள் படும் துயர் யாவும் ஓடிப்போகும் சிவாயநம திருச்சிற்றம்பலம்

TO செயல் அலுவலர் /நிர்வாக அதிகாரி

Sri Saraparameswarar Temple,

Thirucherai Post,

Kumbakonam-Taluk,

Tanjure District,

Tamil Nadu – 612 605.

Tele: +91 – 435-2468001.

The temple priest Sri S.Sundaramurthy Gurukkal can be contacted at 0435-2467759, 94426 37759, 94437 37759.

கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள் வழிபடுங்கள்

மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் கூடவே அன்லிமிட்டெட் ஆக வருவது துன்பங்கள்தான் ஏன் தான் பிறந்தோம் என சொல்லும் அளவுக்கு பலர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பிறவியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், ஒரு சிலர் கடந்த கால கடுமையான கர்ம வினையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

வினையை தீர்த்து வைப்பது என்றால் மேஜிக் போல உங்கள் வினைகள் அனைத்தும் போய் விடாது.

வினைகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ளும் வழியை உங்களை அறியாமலேயே அவர் காட்டுவார். கர்ம வினைகளில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்கும் வழியை காண்பிப்பார் அவர்.

இப்படி தீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் ஒரு கோவில்தான் இந்த சார பரமேஸ்வரர் கோவில்.

இது கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது. இங்குதான் இந்த கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு நாம் 11 திங்கட்கிழமைகளில் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் முடியவில்லை வயதானவர் மிக தூரத்தில் இருந்து செல்கிறோம் என்றால் 11 வாரத்துக்கு அர்ச்சனைக்கு உரிய தொகையை கொடுத்து விட்டால் 11 வார பிரசாதமும் வீடு வந்து சேரும். நாம் 11வது வாரம் மீண்டும் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

இந்த ஆலய இறைவன் பெயர் இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.

மகாபாரதத்தில் வரும் கதையான எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறிய குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு உள்ளது.

இத்தலத்தில்தான் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ இருக்கிறார் இங்குதான் மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்

மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் பிறவிக்கடனும், இப்பிறவி காலத்தில் பொருள் கடனுமாக இரண்டு கடன்கள் உண்டு. இங்குள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை தொடர்ந்து வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம்.

எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

அதே போல் இங்குள்ள பைரவர் ஸ்வாமியை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனியால் அவதிப்படுவோர் இவரை வணங்கலாம்

மிகவும் அருமையான இக்கோவிலுக்கு சென்று வாருங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்.

கும்பகோணத்தில் இருந்து இக்கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.

ஆலய அமைப்பு :

 

இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும், அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னிதியும், ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் உள்ளது. இந்த விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் சொல்வதுண்டு.

மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சிவபெருமான், பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும், சிறப்பு மண்டபமும் மகாமண்ட பமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.

இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதல் தீர்த்தம் ‘பிந்து சுதா தீர்த்தம்’. இது கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. இரண்டாவது ‘ஞான தீர்த்தம்’. இது ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ விளங் குகிறது. இது ஆலய தெப்பக்குளம் ஆகும்.

கருவறை தேவக் கோட்டத்திலும் பிரகாரத்திலும் விநாயகர், ஜூரஹர லிங்கேஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, சப்த கன்னிகள், சமயக்குரவர்கள், பால சுப்பிரமணியர், மகாலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டா தேவி, மூன்று துர்க்கைகள், சண்டிகேஸ்வரர், சூரியன், காளீஸ்வரர், நாகராஜர், நவக்கிரக நாயகர்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

மகரிஷி மோட்ச தலம் :

மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.

ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.

இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.

திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் பிரார்த்தனைகள்

11 திங்கள் வழிபடுங்கள் படும் துயர் யாவும் ஓடிப்போகும்

பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.

மூன்று துர்க்கைகள் :

வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கை களையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, பிரதோ‌ஷம், அஷ்டமியில் பைரவர் சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.

மாசி மாதம் 13,14,15 தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மேல் விழுகிறது. இறைவனுக்கு சூரிய பூஜை செய்து முடித்து சில மணி நேரங்களில் இறைவியின் திருப்பாதங்களில் சூரிய ஒளி படுவதைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது.

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

சிவாயநம திருச்சிற்றம்பலம்

Sri Saraparameswarar Temple,

Thirucherai Post,

Kumbakonam-Taluk,

Tanjure District,

Tamil Nadu – 612 605.

Tele: +91 – 435-2468001.

The temple priest Sri S.Sundaramurthy Gurukkal can be contacted at 0435-2467759, 94426 37759, 94437 37759.

Comments