நான், என்னால், எனது வெற்றி, எனது திறமை, எனது உழைப்பு



நான், என்னால், எனது வெற்றி, எனது திறமை, எனது உழைப்பு என்று எண்ணுபவர்களுக்கு மகாபாரதம் எடுத்துரைக்கும் உண்மைகள்..
 
பாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டன.. யுதிஷ்டிரன் சிறப்பாக பல ஆண்டுகள் ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்துவிட்டான்... இன்னொருபுறம், துவாரகையில் கண்ணன் ஆட்சி செய்து வருகிறார்.. அனைவருக்கும் வயதாகிவிட்டது... கண்ணன் தன் அவதாரத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.. காந்தாரியின் சாபத்தின்படி, ஒரு வேடனால் தாக்கப்பட்டு வைகுண்டம் திரும்புகிறார்... அதே சாபத்தின்படி யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இறக்கிறார்கள்.. துவாரகையும் கடலில் மூழ்குகிறது.. மிச்சம் மீதி இருப்பவர்களை மீட்டு அர்ஜுனன் ஹஸ்தினாபுரம் அழைத்துவர செல்கிறான்.. அவர்களை அழைத்து வரும் வழியில் பல திருடர்கள் கொள்ளையடிக்க வருகிறார்கள்.. அர்ஜுனன் அவர்களை எதிர்த்து போரிடுகிறான்.. ஆனால் எல்லாம் பயனற்று போகிறது.. அஸ்திர வித்தைகள் மறந்துபோகின்றன.. வில்லேந்த சிரமப்படுகிறான்.. திருடர்கள் பலரை கொன்று, பல நகைகளை கொள்ளையடித்து, பெண்களை கடத்திச்செல்கிறார்கள்..

அர்ஜுனனால் தன் இயலாமையை நினைத்து துக்கம் தாங்க முடியவில்லை. வியாசரிடம் சென்று அழுகிறான்.. நான் பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாவீரர்களை எதிர்த்து சண்டையிட்டிருக்கிறேன்.. ஆனால் இன்று என்னால் இந்த சாதாரண கொள்ளையர்களை வீழ்த்த முடியவில்லையே.. இனி இந்த காண்டீபத்தை (அர்ஜுனனின் வில்) ஏந்த தகுதியற்றவனாக போய்விட்டேன் என புலம்புகிறான்.. அதற்கு வியாசர் சொல்கிறார்.. அர்ஜுனா.. நீ எது உன் திறமை என்று நினைத்தாயோ அது உன்னுடையதல்ல.. இறைவன் உனக்கு அந்த வரத்தை உன் மூலம் எதையோ சாதிக்க நினைத்தார், அதற்காக அந்த திறமையை கொடுத்தார்.. இப்பொழுது அதற்கான அவசியம் முடிந்து போய்விட்டது (காந்தாரியின் சாபத்தின்படி அது நடந்தே தீரவேண்டும்).. அதனால் அந்த திறமையை திரும்ப எடுத்துக்கொண்டார்.. ஆகையால் எதுவும் உன்னால் நடந்ததல்ல என்கிறார்..

இதுதான் நம் அனைவருக்கும்.. நாம் ஏதோ வாழ்க்கையில் அடைந்த சிறு வெற்றிகளை நம் திறமையால் அடைந்ததாக நினைத்துக்கொள்கிறோம்.. ஆனால் அது எதுவும் நம்மால் ஆனதல்ல.. இறைவன் உங்களுக்கு ஒரு குறிப்பிட்டகாலத்தில் ஏதோ காரணத்திற்க்காக கொடுத்தது.. அதற்க்கான தேவை முடியும்பொழுது அதை திரும்ப எடுத்துக்கொள்கிறேன்.. நடப்பவை யாதும் நம் செயலால் அல்ல என்கிற என்கிற அகந்தையை மறப்பதே தர்மத்தின் அடிப்படை சித்தாந்தமாகும்...🙏🙏🙏.

Comments