27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவரும் அவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களும்.
சைவ சமயம் அனைத்து கடவுள்களையும் சிவ அம்சம் என்கிறது. அதன் அடிப்படையில் ஆதிசக்தி, முருகன், விநாயகன், வீரபத்திரன், பைரவர், உருத்திரன் ஆகியோரை சிவ அம்சமாக விவரிக்கிறது. வைணவ சமயம் திருமால் பலராமர், ஆதிசேசன், அனுமார் ஜாம்பவான் ஆகியோரை சிவ அம்சமாகக் கூறுகிறது. இறைவன், இறைவியர் மட்டுமல்லாத அஃறினையான பொருள்களும் சிவ அம்சம் நிறம்பியதாக நம்பப்படுகிறது. அவையாவன ருத்திராட்சம், குத்துவிளக்கின் மேற்பாகம், யோகக் கலையில் பிங்கலை என்பனவாகும். இவற்றில் சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவரவரான பைரவர் பற்றிய விபரங்களை கடந்த சில நாட்களாக நாம் பார்த்து வருகிறோம்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் அருள்பாலிக்கும் சில பைரவர் கோவில்கள் பற்றிய விபரங்கள் பற்றி தற்போது இந்த பதிவில் காண்போம்.
சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும் இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவுப் பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்து சந்நதிகளையும் பூட்டி அந்த சாவிகளை பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்னரே ஆலயத்தைப் பூட்டுவது மரபு. சிவாலயத்தின் காவலராக இருந்து எந்த இடையூறோ, இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை க்ஷேத்ரபாலகர் என பக்தர்கள் வணங்குகின்றனர்.
அஷ்டமி திதியன்று சிவாலயங்களில் உள்ள பைரவரை வழிபட ஐஸ்வர்யம், சுகம், பொன் பொருளையும் தருவார். அஷ்டமி திதியன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்று விரதமிருந்து ஒருவேளை உணவு மட்டும் உண்டு பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, எண்ணியன எல்லாம் ஈடேறும்.
1. அஸ்வினி: ஸ்ரீ ஞான பைரவர்* - கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.
2. பரணி : ஸ்ரீமகா பைரவர்* - திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.
3. கார்த்திகை : ஸ்ரீ சொர்ண பைரவர்* - திருவண்ணாமலை.
4. ரோகிணி: ஸ்ரீகால பைரவர்* -பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.
5. மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்* - சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
6. திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்* - ஆண்டாள் கோவில் (பாண்டிச் சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
7. புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்* -பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.
8. பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர் - (திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
9. ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்* - காளஹஸ்தி.
10. மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்* -வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
11. பூரம்* : ஸ்ரீ கோட்டை பைரவர்- பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.
12. உத்திரம்* : ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
13. அஸ்தம்* : ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
14. சித்திரை : ஸ்ரீ சக்கர பைரவர்* - தர்மபுரி- மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.
15. சுவாதி : ஸ்ரீ ஜடா முனி பைரவர்* - புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
16. விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்* - திருமயம்.
17. அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்* - கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.
18. கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்* - சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர்
சேலம் (மாவட்டம்) 636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு உங்கள் அன்பு ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462
19. மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்* - சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
20. பூராடம்: ஸ்ரீகால பைரவர்* - அவிநாசி - அவிநாசியப்பர் கோவில்.
21. உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்* - கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
22. திருவோணம்: திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்* - வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
23. அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி* .
24. சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்* - சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.
25. பூரட்டாதி: கோட்டை பைரவர்* - ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
26. உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்* - சேங்கனூர் - சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
27. ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்* - தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.
Comments
Post a Comment