சத்து மாவுக்கு தேவையான
பொருட்கள்:
*முளை கட்டிய பொருட்கள்*
1.ராகி
2.வெள்ளை சோளம்
3.சிவப்பு சோளம்
4.மக்கா சோளம்
5.பாசிப்பயறு
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.சிவப்பு சோயா
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை
16.கருப்பு கொண்டை கடலை
17.நரிப்பயறு
*முளை கட்டாத பொருட்கள்*
18.வெள்ளை எள்
19.கசகசா
20.பொட்டுக்கடலை
21.அவல்
22.ஜவ்வரிசி
23.பனங் கிழங்கு
*நட்ஸ் வகைகள்*
24.பிஸ்தா
25.முந்திரி
26.சாரப்பருப்பு
27.பாதாம்
*வாசனை பொருட்கள்*
28.ஓமம்
29.சுக்கு
30.ஏலம்
*பாரம்பரிய அரிசி வகைகள்*
31.மாப்பிள்ளை சம்பா
32.கருப்பு கவுணி அரிசி
33.சிகப்பு அரிசி
34.மூங்கில் அரிசி
35.தினை
36.வரகு
37.குதிரை வாலி
38.சாமை
39.பார்லி
*மூலிகை பொருட்கள்*
40.ஜாதிக்காய்
41.மாசிக்காய்
42.அமுக்கிரா கிழங்கு
43.அதிமதுரம்
44.நாயுருவி
45.நாட்டு அத்தி
மேலே உள்ள 45 வகையான பொருட்களை சேர்த்து அரைத்து தரமான பாரம்பரிய சத்துமாவு
சத்துபானம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
சத்துமாவு – 2 ஸ்பூன்
பால் அல்லது தண்ணீர் – 2 டம்ளர்
நாட்டு சக்கரை அல்லது பனஞ் சக்கரை அல்லது உப்பு மிளகு– தேவைக்கு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.
சிறிது நேரத்தில் காய வைத்த பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் இனிப்பு சேர்த்து கலக்கி இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு பானம் தயார்
அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.
1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப் படுவதால் 6 மாதம் வரை கெடாது.
2. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்
3.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...
Comments
Post a Comment