ராமசாமி கோவில்









ராமசாமி கோவில். கிராமிய மணம் மாறாமல் தோட்டங்களுக்குள் இருக்கும் 400 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான மிகவும் சக்திவாய்ந்த கோவில். இறைதிருஉருவம் பச்சைமண்ணால் ஆன திருமேனியாகும்.
சனிக்கிழமைகளில் கடல் அலையென ஆயிரமாயிரமாய் ஆயிரக்கணக்கில் வரும் மக்கள் கூட்டம். குறைந்தபட்சம் 1 - 2 மணிநேரம் வரிசையில் நின்றால் மட்டுமே தரிசனம் செய்யமுடியும்.
ஆனால் இதர நாட்களில் சென்றால் கூட்டமின்றி உடனே தரிசனம் செய்யலாம். சுற்றிலும் இருக்கும் மரங்களில் இருந்து பறவைகள் விதவிதமான குரல்களில் கீச்மூச் என பேசிமகிழ அதை கேட்டு மகிழ்ந்தவாறே இயற்க்கை சூழ்நிலையில் அமைதியாக ஆனந்தமாக மணிக்கணக்கில் அமர்ந்து தரிசனம் செய்யலாம். நாங்க பொங்கல் வச்சு கும்பிட்டோம். எங்களை போலவே நிறைய பேர் வந்துட்டு போயிட்டு இருந்தாங்க.
இந்த ஆனந்த தரிசனத்தை உணர விடுநாளில் அவசியம் ஒருநாள் போயிட்டு வாங்க. கோவில் பெரும்பாலும் திறந்தே இருக்கும். ஒருவேளை பூட்டப்பட்டு இருந்தாலும் பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் பக்கத்து தோட்டத்தில்தான் வசிக்கின்றார்கள். எனவே வாசல் சுவரில் எழுதப்பட்டு இருக்கும் தொலைபேசி எண்ணை கூப்பிட்டால் ஐந்து நிமிடங்களில் வந்துவிடுவார்கள்.
@ திருப்பூர் - தாரபுரம் சாலை. சுமார்15கிமீ தூரம்.

Comments