பிரண்டை துவையல்

*பிரண்டை துவையல்*

இதெல்லாம் இப்ப அபூர்வமாகிப் போச்சு.

நல்லா பசியை தூண்டுற சக்தி இந்த செடிக்கு இருக்கு .வாந்தி வரும் உணர்வு,அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
எலும்பு வலுவாக்கும்.

*தேவையானவை*

நறுக்கிய பிரண்டை - கால் கப்
மிளகாய் வற்றல் - 3
தேங்காய் துருவல் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி

*செய்முறை*

மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். பிரண்டையை சுடுதண்ணீரில் ஊறவைத்து  அலசி, வடிகட்டி தண்ணீரை வடித்துவிடவும்.  பின்னர் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

பிறகு அதில் கறிவேப்பிலை, பிரண்டை இரண்டையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

இவை நன்கு வதங்கியதும் அதனுடன் தேங்காய் துருவல், புளி, உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுக்கவும்.

இதை சாதத்துடன் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

*குறிப்பு :  பிரண்டையை நன்கு வதக்க வேண்டும்  இல்லையெனில் நாக்கில் அறிப்பு உண்டாகும்.*
🙏மருந்தே இல்லா உடல்நலம்.!
மருத்துவமே தேவையில்லா மனிதகுலம்..!!.
*வேதிஹா ஆர்கானிக்ஸ் & ஹெர்பல்ஸ்*
*Follow us on Facebook:*
www.facebook.com/groups/243591169428150/

*Join with us to Create Health Revolution*

Comments