ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்:

ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்:
••••••••••••••••••••••••••••••
அஞ்சனை மைந்தா ஆஞ்சநேயா
ஆற்றல் தேவா காற்றின் செல்வா
இசையில் மயங்கும் இங்கித வடிவா
ஈடிணை யிலா ஈசன் புதல்வா
உத்தம சீலா உயர் வானரமே
ஊகம் நிறைந்த ஏகசுந்தரனே
எதையும் முடிக்கும் கதை கொண்டவனே
ஏவும் கணை போல் தாவும் பரமே
அயிராவதம்போல் வலிவாணவனே
ஒன்றாய் பலவாய் உருவெடுப்பவனே
ஓயுதலின்றி உதவிடும் குணபா
அவ்வியம் அகற்றி அருள் தரும் மகிபா
எக்கார் மனதில் இடம் கொள்பவனே
எளியேன் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சத்திய விரதா
சங்கர ஸ்வரூபா சரணம் சரணம்
பேரறிவாளா பிரமச்சர்யா ஆராவமுதன்
அகம்சேர் அழகா தன் பலமஅறியாதவிப்ராகாசா
நன் மனத்துரையும் நல்ஹனுமானே
வந்தனைக்குரிய வளர்மணி தேவா
சுந்தர காண்ட சுடர்மணித்தேவா
சசிவோத்தமனே சஞ்சீவிராயா
வசீகராவடிவா வாயுகுமாரா
அடியேன் சரணம் சரணம் சரணம்
படியார் தமக்கு பாடம் புகட்டும்
துணிவே துணிவே துணிவே துணிவே
துணையே துணையே துணையே துணையே
கணமே கணமே கணமே கணமே
நினைவாய் நினைவாய் நினைவாய் வருவாய்
மரணமணுகா மந்திர விலாசா
கரணம் கடந்த கவிக்குலதிலகா
சீருபகாரா சிந்தனையாளா
மாருதி செல்வா மன ரட்சகனே
வருவாய் வருவாய் வல்லமை வீரா
அருள்வாய்.. அருள்வாய்... கவசம்* கவசம்***
.
ஜெய ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்
ஜெயஜெயராம் ராம் ஜெய மாருதியே
சரணம் சரணம் சத்திய விரதா
சரணம் சரணம் சரணம்சத்ரு சம்ஹரா
சரணம் சரணம் சங்கர ஸ்வரூபா
சரணம் சரணம் மலரடி சரணம்.
ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏அன்புடன் இரவு வணக்கம்! 🙏

Comments