*மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ*
மருத்துவக் குணமும் மகத்தான நலமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியா தவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம்.
அறியாமையையும், அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பூவின் குணநலன்களை விளக்குவதோடு, அதை வைத்து சூப்பர் உணவுகளையும் செய்து பார்ப்போம்..
நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது.
சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப்படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும்.
இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப் படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன் பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன.
வாழைப் பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக கதலி எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது.
இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.
வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது பித்த சம்ஹா (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது) எனப்படுகிறது.
இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது வெப்பத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், குடல் புண் , இரைப்பை புண், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், உள்ளிட்ட வற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
🙏 ~
*மருந்தே இல்லா உடல்நலம்! மருத்துவமே தேவையில்லா மனிதகுலம்!!*
*வேதிஹா ஆர்கானிக்ஸ் & ஹெர்பல்ஸ்*
🌍🚸🚸🚸🚸🚸🌍
*Follow us on Facebook:*
www.facebook.com/groups/243591169428150/
Join with us to Create Health Revolution
Comments
Post a Comment